கொரோனாவின் ‘ஒமிக்ரான்’ வகை உலகம் முழுவதையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மாறுபாடு தற்போது உலகின் 89 நாடுகளில் பரவி உள்ளது.
அதன்படி இந்தியாவிலும் Omicron தொற்று பதிவாகியுள்ளன, தற்போது இந்த தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் (Coronavirus) இரண்டாவது அலையில் பேரழிவை ஏற்படுத்திய டெல்டா மாறுபாட்டை விட ஒமிக்ரான் பல மடங்கு வேகமாக பரவுவது பற்றிய கவலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஒமிக்ரான் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
Omicron தொற்றின் அறிகுறிகள் என்ன
ஒமிக்ரான் மிக வேகமாக பரவுகிறது ஆனால் அதன் அறிகுறிகள் பற்றி இதுவரை அதிக தகவல்கள் வெளியாகவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அறிகுறிகளின் அடிப்படையில் இந்த மாறுபாட்டின் நோயாளிகளை அடையாளம் காண்பது மிகவும் கடினமாகி வருகிறது. இது தொடர்பாக பிரிட்டனில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதில் Omicron இன் சில புதிய அறிகுறிகள் கூறப்பட்டுள்ளன. இதன்படி, ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூக்கு ஒழுகுதல் (Runny Nose), தலைவலி (Headache), சோர்வு (Fatigue) மற்றும் தொண்டை வறட்சி (Dry throat) போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.
ஒமிக்ரானின் அறிகுறிகள் தொடர்பான இந்த புதிய வெளிப்பாடு கவலையளிக்கிறது, ஏனெனில் இந்த அறிகுறிகள் அனைத்தும் சாதாரண ஜலதோஷத்திற்கானது. அத்தகைய சூழ்நிலையில், ஒமிக்ரான் ஆன பிறகும், மக்கள் அதை ஒரு பொதுவான சளி என்று புறக்கணிக்கலாம். இதனால் பலருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்படலாம்.
இந்நிலையில், டெல்டா வகை கொரோனா வைரஸினை விட ஓமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது எனவும், டெல்டாவை விட மிகவும் குறைவான உடல் பாதிப்பையே Omicron ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அதிவேகமாக நுரையீரலுக்குள் செல்லும் ஓமிர்ரோன் வைரஸ் டெல்டாவை விட மிக குறைவான அளவில் நுரையீரல்களை தாக்கும் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.