கியூபெக் மாகாணத்தில் மெய்நிகர் ஆட்டங்களைக் காட்டி சிறுவர்களுக்கு தடுப்பூசி எற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தடுப்பூசி ஏற்றுகை குறித்த அச்சத்தை விலக்கும் நோக்கில் இவ்வாறு மெய்நிகர் ஆட்டங்களை விளையாட்டுக்கள் விளையாடும் வசதி தடுப்பூசி நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறுவர்கள் முழுக் கவனத்தை செலுத்தி விளையாடிக் கொண்டிருக்கும் போது தடுப்பூசி ஏற்றப்படுகின்றது.
கனடாவில் தற்பொழுது 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி ஏற்றும் நிலையங்களும் சிறுவர்களுக்கு ஊகந்த வகையில் அழகுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறார்கள் தடுப்பூசி ஏற்றப்படுவதனை மறந்து மகிழ்ந்திருப்பதாக தடுப்பூசி ஏற்றும் நிலையங்களின் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.