தொழிலாளர்களுக்கான ஊதியம், சமூகப் பாதுகாப்பு, தொழில்துறை உறவுகள் மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் ஆகிய நான்கு தொழிலாளர் குறியீடுகளை அடுத்த நிதியாண்டில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக, மூத்த அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான பிடிஐயிடம் தெரிவித்தார். புதிய ஊதிய குறியீடு அமலுக்கு வந்தால், அவை வேலை நேரம், சம்பளம் மற்றும் PF பங்களிப்பு ஆகியவற்றில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தும்
மத்திய அரசு, வரும் நிதியாண்டில் புதிய ஊதியக் குறியீட்டை (New Wage Code)அமல்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், மாத சம்பளம், வேலை நாட்கள் உள்ளிட்ட பல விதிகள் மாறுகின்றன.
– இதில், வேலை நாட்கள் தொடர்பாக புதிய நெறிமுறைகள் அமல்படுத்தப்படும். அதாவது, நீங்கள் இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும். இதன் மூலம் உங்கள் வார இறுதி விடுமுறை 2 நாட்களில் இருந்து 3 நாட்களாக அதிகரிக்கும்.
– எனினும் மூன்று வார இறுதி விடுமுறை பெற நேர 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டு. அதாவது ஊழியர்கள் வாரத்தில் மொத்தம் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஒரு நாளின் வேலை நேரம் தற்போது 8 -9 மணி நேரமாக உள்ள நிலையில், வேலை நேரம் அதிகரிக்கப்பட்டு, நாட்கள் குறைக்கப்படும்.