Home கனடா கனேடிய வெளிவிவகார அமைச்சர் கோவிட் தொற்றினால் பாதிப்பு

கனேடிய வெளிவிவகார அமைச்சர் கோவிட் தொற்றினால் பாதிப்பு

by Jey

கனேடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் தாம் பீ.சீ.ஆர் பரிசோதனை செய்து கொண்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவிற்காக காத்திருப்பதாகவும் அமைச்சர் ஜோலி தெரிவித்துள்ளார்.

எனினும் தமக்கு எவ்வாறு கோவிட் தொற்று ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்களை வெளியிடவில்லை.

தாம் தனிமைப்படுத்தலில் இருந்து கொண்டு பணிகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளுமாறும் கோரியுள்ளார்.

related posts