Home இந்தியா பிரதமர் மோடியின் படத்தை நீக்க வேண்டும்

பிரதமர் மோடியின் படத்தை நீக்க வேண்டும்

by Jey

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கோவின் இணையதளம் மூலம் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. இத்தகைய சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் படத்தை நீக்க வேண்டும் என கேரளா ஐகோர்ட்டில் பீட்டர் மயலிபரம்பில் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மேலும், விளம்பர நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும், நீதிமன்ற நேரத்தை வீணக்கியதற்காக மனுதாரருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். 6 மாதத்திற்குள் ரூ. 1 லட்சத்தை செலுத்த வேண்டும் எனவும் அவ்வாறு செலுத்த தவறினால் வருவாய் மீட்பு நடவடிக்கைகள் மூலம் அவரது சொத்துக்களில் இருந்து அபராதத்தை வசூலித்துக்கொள்ளலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

related posts