Home கனடா முதல்வரை வீடு செல்ல விடாது, அவரது வீட்டுக்கு ஏதிரில் போராட்டம்

முதல்வரை வீடு செல்ல விடாது, அவரது வீட்டுக்கு ஏதிரில் போராட்டம்

by Jey

ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட்டை அவரது வீட்டுக்கு செல்ல விடாது அவரது வீட்டுக்கு எதிரில் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி ஏற்றுகைக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் முதல்வர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வீட்டுக்குள் பிரவேசிக்க முடியாத நிலைமை உருவாகியது என முதல்வரின் பேச்சாளர் Ivana Yelich  தெரிவித்துள்ளார்.

இட்டாபிகொக்கில் அமைந்துள்ள முதல்வரின் வீட்டின் எதிரில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாகாண அரசாங்கத்தின் தடுப்பூசி ஏற்றுகை கொள்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டு இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

related posts