ஜப்பான் பாராளுமன்றத்தில் ஜப்பானிய சுகாதார அதிகாரிகள் ’’இந்த குளிர்காலத்தில் அதிகப்படியான பால் டன் கணக்கில் வீணாகி வருகிறது. தற்போது, 5,000 டன் பச்சை பால் வீணாகலாம். பால் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது’’ என்று கூறினார்கள்.
இதுகுறித்து, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தினசரி உணவான பால் வீணாகுவதை தடுக்க நீங்கள் வழக்கமாகச் செய்வதைக் காட்டிலும் கூடுதலாக ஒரு கப் பால் குடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சமைக்கும் போது பால் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’’ என்று கூறினார்
ஜப்பானிய பால் பண்ணையாளர்கள் டிசம்பர் 25 முதல் ஜனவரி 3 வரை தினமும் கூடுதலாக ஒரு லிட்டர் பால் வாங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும், சமூக ஊடகங்களில் #1L perday என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தங்கள் முயற்சிகளை கவனத்தில் கொண்டு வருகின்றனர். இதையடுத்து, கன்வீனியன்ஸ் ஸ்டோர்களின் சூடான பால் கோப்பைகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடியை டிசம்பர் 31 மற்றும் புத்தாண்டு தினத்தில் வழங்குகிறது. என்பதும் குறிப்பிடதக்கது.