கனடாவில் நோய்த் தொற்று பரவுகை தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாக அவசர ஆயத்தநிலை அமைச்சர் பில் பிலயர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் ஒமிக்ரோன் திரிபு பரவுகை வெகுவாக அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
கியூபெக் மாகாணத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
இதேவேளை, ஒன்றாரியோவில் கோவிட் பரிசோதைன சான்றிதழ்கள் மீள விற்பனை செய்யப்படும் சந்தர்ப்பங்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளிலும் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிப்பு பதிவாகி வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.