கனடாவில் ஒரே நாளில் பதினைந்தாயிரம் கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நேற்றைய தினம் கனடாவில் மொத்தமாக 14995 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என பொதுச் சுகாதார அலுவலகம் அறிவித்துள்ளது.
அண்மைய நாட்களாகவே நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை சடுதியான அதிகரிப்பினை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த திங்கட்கிழமை 10665 நோய்த் தொற்று உறுதியாளர்களும், செவ்வாய்க்கிழமை 11690 தொற்று உறுதியாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நோய்த் தொற்று ஆரம்பமானது முதல் இந்த வாரத்திலேயே அதி கூடிய சராசரி நோய்த் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு வார கால சராசரி 10487 ஆக பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.