Home உலகம் வெள்ளி கிரகத்திலும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம்

வெள்ளி கிரகத்திலும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம்

by Jey

பூமிக்கு அருகில் உள்ள வெள்ளி கிரகம். இது சுக்கிரன் என்றும் அழைக்கப்படுகிறது. அங்கு வளிமண்டலத்தின் வெப்பநிலை 400 டிகிரி செல்சியஸ் வரை செல்கிறது, எனவே இது ‘கிரீன் ஹவுஸ்’ பிளானட் என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளியின் வளி மண்டலத்தில் 96% கரியமில வாயு நிறைந்திருப்பதே இதற்கு காரணம். கார்பன் டை ஆக்சைடு மற்றும் சல்பூரிக் அமிலம் அதன் வளிமண்டலத்தில் நீர்த்துளிகள் வடிவில் மிதக்கின்றன. இந்த தட்ப நிலையிலும், சூழ்நிலையிலும் எந்த வகையிலும் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்பில்லை என்று தான் இதுவரை நம்பப்பட்டது.

தீவிர சூழ்நிலைகளில் கூட உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது . வெள்ளியில் நுண்ணுயிரிகள் வாழ முடியும் என கார்டிஃப் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய ஆய்வில் கூறியுள்ளனர். வெள்ளிகிரகத்தின் மேகங்களில் அம்மோனியா இருப்பது, வெள்ளியின் அத்தகைய வளிமண்டலத்தில் உயிர்வாழக்கூடிய நுண்ணுயிரிகள் இருப்பதற்கான சாத்தியக் கூற்றை உணர்த்துகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 

அம்மோனியா இருப்பதால், வெள்ளி கிரகத்தின் அதிக அமிலம் கொண்ட வளிமண்டலத்தை நடுநிலையாக்குகிறது. வெள்ளியின் மேல் பரப்பில் அமோனியா வாயு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சில உயிரியல் செயல்பாடுகள் அம்மோனியா உருவாவதற்கு காரணமாக இருப்பதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். உயிரினங்கள் அல்லாத ஒரு மூலத்திலிருந்து இந்த வாயு உருவாகி இருப்பதற்கு சாத்தியக் கூறு இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

பூமிக்கு பிறகு செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளதா என தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது வெள்ளி கிரகத்திலும் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் வெள்ளி கிரகத்திற்கு இரண்டு விண்கலங்களை அனுப்ப நாசாவும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் திட்டமிட்டுள்ளன. வெள்ளி கிரகத்திற்கு அனுப்பப்பட்ட விண்கலன்கள் தரையிறங்கிய சில நிமிடங்களே அங்கு தாக்குப்பிடித்துள்ளன; அதன்பின்பு அவை செயலிழந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

related posts