ஒமிக்ரோன் திரிபினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சரியானவை என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் திரிபு காரணமாக கனடா முழுவதில் கோவிட் பரிசோதனைகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்துவதில் அதிகாரிகள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஒமிக்ரோனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் சரியான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
எல்லைக் கட்டுப்பாடுகள், பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.