கியூபெக் மாகாணத்தில் சுகாதார கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட ரீதியான ஒன்றுகூடல்களில் கலந்து கொள்ளக்கூடிய உச்ச வரம்பு ஆறு ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துச் செல்வதாக முதல்வர் பிரான்கோயிஸ் லெகாயுல்ட் தெரிவித்துள்ளார்.
வீடுகளில் ஒன்றுகூடக் கூடிய அதிகபட்ச எண்ணிக்கை ஆறு ஆக வரையறுக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்மஸ் பண்டிகையைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.