இந்திய ரயில்வே இன்று 335 ரயில்களை ரத்து செய்தது. 30 ரயில்கள் பாதை மாற்றி திருப்பி விடப்பட்டன. இது தொடர்பான அறிக்கையையும், ரயில் இயங்கும் விவரத்தின் பட்டியலையும் ஐஆர்சிடிசி வெளியிட்டது.
ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி enquiry.indianrail.gov.in, 30 ரயில்கள் தங்கள் பாதையை மாற்றியுள்ளன. இது தவிர, 4 ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்தியன் ரயில்வே, ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலை தினசரி வெளியிடுகிறது. ரயிலில் பயணம் (Travel in Train) செய்வதற்கு முன், ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலை சரிபார்ப்பது நல்லது.
வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக பல ரயில்கள் திட்டமிட்ட நேரத்தில் இயக்கப்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதிலும் வட இந்தியாவில் குளிர் வாட்டியெடுக்கும் இந்த சமயத்தில் ரயில்களின் புறப்பாடு மற்றும் வந்து சேரும் சமயம் மாறிக் கொண்டேயிருக்கின்றன.
ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்
எனவே பயணிகளின் வசதியை முன்னிட்டு, ரயில் தொடர்பான அறிவிப்புகள் 139 என்ற ரயில்வே ஹெல்ப்லைன் எண்ணிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
இதனிடையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களின் வசதிக்காக தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 17 வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சென்னையிலிருந்து பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்ககம்.
லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதால், சென்னையில் இருந்து நாகர்கோவில், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.