Home இந்தியா மஞ்சள் பை என்பதை யாரும் அவமானமாகக் கருத வேண்டிய அவசியமில்லை

மஞ்சள் பை என்பதை யாரும் அவமானமாகக் கருத வேண்டிய அவசியமில்லை

by Jey

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என பல வகையிலும் விழிப்புனர்வு பிரச்சாரங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கிறது, அதைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.

பேரங்காடிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களான இருக்கும் டாஸ்மாக் நிறுவனம், அறநிலையத் துறை, உணவு பாதுகாப்புத் துறை, பசுமை குழுக்கள், தேசிய பசுமை படை என அனைவரையும் அழைத்து ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு என்ற தலைப்பில் பெருநகரங்களில் மண்டல மாநாடு நடத்தப்பட்டது.
வாகன கண்காட்சி மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. சமூக வலைதளங்களில் இடைவிடாது பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

சிறு குறு நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெரிய தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்கிட கடந்த 03.09.2021 அன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

கடந்த நவம்பர் 27-ஆம் தேதி அரசாணை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கம் மட்டும் நினைத்தால் இதனை செயல்படுத்த முடியாது. மக்களும் இணைய வேண்டும் என்று அரசு உறுதியாக நம்புகிறது. பிளாஸ்டிக் பொருள்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும்.

அகத்தூய்மை வாய்மைக்கு! புறத்தூய்மை வாழ்வுக்கு! – என்ற வைர வரிகளை உருவாக்கிக் கொடுத்தவர் கருணாநிதி அவர்கள். அந்த வழியை அனைத்து மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, சுற்றுச்சூழலைக் காப்பதிலும் முன்னிலை வகிக்க வேண்டும். இயற்கையைக் காப்போம்! இயற்கையோடு இணைந்து, இயைந்து காப்போம்!

இயற்கையைக் கெடுக்கும் பிளாஸ்டிக்குக் முற்றுப்புள்ளி வைப்போம்! மஞ்சள் பை என்பதை யாரும் அவமானமாகக் கருத வேண்டிய அவசியமில்லை. சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளப் பை தான் இந்த மஞ்சள் பை. அதை நாம் நிரூபித்துக் காட்டுவோம்.”இவ்வாறு                                                                                                                                                                                                                                                          மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

related posts