Home உலகம் 3094 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் – கொரியா நீதி அமைச்சகம்

3094 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் – கொரியா நீதி அமைச்சகம்

by Jey

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்காக 22 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹை (Park Geun-hye) புத்தாண்டு பொது மன்னிப்பின் ஒரு பகுதியாக பொதுமன்னிப்பு வழங்கப்படும் நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தென் கொரிய நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

தென் கொரியாவின் நீதி அமைச்சகம் டிசம்பர் 24 ஆம் தேதி (2021 டிசம்பர் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், “2022 ஆம் ஆண்டுக்கு முன்னதாக, முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹை (Park Geun-hye) உட்பட 3094 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்” என்று அரசாங்கம் கூறியது.

தொடர்ச்சியான தோள்பட்டை மற்றும் கீழ் முதுகு அசௌகரியம் காரணமாக பார்க் 2021ஆம் ஆண்டில் மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனவே அவரது உடல்நிலை காரணமாக பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலில் அவர் சேர்க்கப்பட்டதற்குக் காரணம் யோன்ஹாப் செய்தி நிறுவனம் (Yonhap news agency) செய்தி வெளியிட்டுள்ளது.

பதவியில் இருந்தபோது, அவரது தோழி சோய் சூன்-சில் (Choi Soon-sil) அரசின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தியதாக அரசியல் ரீதியாக சர்ச்சை ஏற்பட்டதால், 2017 இல் முன்னாள் அதிபர் பார்க் கியூன் ஹை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2013 முதல் 2016 வரை மூன்று முன்னாள் தேசிய புலனாய்வு சேவை தலைவர்களிடமிருந்து மொத்தம் 3.5 பில்லியன் வோன் ($2.9 மில்லியன்) லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹைக்குக் 2018 இல் சிறைத்தண்டனை 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது

2013 இல் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்றார் பார்க். தோள்பட்டை மற்றும் முதுகுவலி காரணமாக 69 வயதான பார்க் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1952 பிப்ரவரி 2ம் தேதி பிறந்த தென்கொரியாவின் முதல் பெண் அதிபர், அந்நாட்டின் முன்னாள் அதிபர் பார்க் சுங்-ஹீயின் மகள் ஆவார். அவரது தந்தை Park Chung-hee, 1961ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின்போது ஆட்சியைக் கைப்பற்றி 1979ம் ஆண்டு வரை 18 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

1974 ஆம் ஆண்டு பார்க் கியூன் ஹையின் தாய் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு நாட்டின் முதல் பெண்மணியாகவும் திகழ்ந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1979 இல் அவரது தந்தை Park Chung-hee பாதுகாப்புத் தலைவரால் கொல்லப்பட்ட பிறகு, நாட்டின் முதல் பெண் அதிபராக பதவியேற்றார் பார்க் கியூன் ஹை

related posts