Home இந்தியா முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ள யூனியன் பிரதேசங்கள்…

முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ள யூனியன் பிரதேசங்கள்…

by Jey

சுகாதார செயல் திறனுக்கான தரவரிசைப் பட்டியலை நிதி ஆயோக் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தமிழகம் 2- ஆம் இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தை கேரளா பிடித்துள்ளது.

பட்டியலில் கடைசி இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. 2019-20 ஆண்டு கால கட்டத்தை கணக்கில் கொண்டு இந்த தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப்பட்டியலில் தெலுங்கானா 3 ஆம் இடத்தில் உள்ளது.

சிறிய மாநிலங்களில், ஒட்டுமொத்த செயல்திறனிலும், அதிகரிக்கும் செயல்திறனிலும் மிசோரம் சிறந்த மாநிலமாக தேர்வாகியுள்ளது. அதே சமயம் யூனியன் பிரதேசங்களில், டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகியவை ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் கடைசி இடங்களில் உள்ளன.

அதேவேளையில், அதிகரிக்கும் செயல்திறனின் இந்த யூனியன் பிரதேசங்கள் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளன.

 

related posts