Home இந்தியா மோடி மன்னிப்பு கேட்பதை நாங்கள் விரும்பவில்லை

மோடி மன்னிப்பு கேட்பதை நாங்கள் விரும்பவில்லை

by Jey

பிரதமர் மோடி மன்னிப்பு கேட்பதை நாங்கள் விரும்பவில்லை என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகெய்ட் தெரிவித்துள்ளார்.மன்னிப்பு கேட்பதால் வெளிநாட்டில் அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் அதனை தாங்கள் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, ‘பிரதமர் மன்னிப்பு கேட்பதை நாங்கள் விரும்பவில்லை. வெளிநாட்டில் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை.

நாங்கள் நேர்மையாக வயல்களில் விவசாயம் செய்கிறோம்.ஆனால், டெல்லி, எங்கள் கோரிக்கைகளை கவனிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களும் மீண்டும் கொண்டு வரப்பட்டால், போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என்று மத்திய அரசை மிரட்டியும் அவர் பேசியுள்ளார்.

முன்னதாக மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19ஆம் தேதி அறிவித்தார்.அதன்படி, சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதா தக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

related posts