கனடாவின் வைத்தியசாலைகளது கொள்ளளவு குறித்து நிபுணர்கள் கரிசனை வெளியிட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவி வரும் நிலையில் இந்த விடயம் குறித்து நிபுணர்கள் தங்களது கரிசனையை வெளியிட்டுள்ளனர்.
கோவிட் அலையொன்றை எதிர்நோக்க போதியளவு மருத்துவ பணியாளர்கள் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே சுகாதாரப் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நோய் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு பெரும் நெருக்கடிகளை உருவாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் நாள் தோறும் நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிப்பினை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.