Home இந்தியா ஜம்மு காஷ்மீரில் அதிக பனிப்பொழிவு

ஜம்மு காஷ்மீரில் அதிக பனிப்பொழிவு

by Jey

ஜம்மு காஷ்மீரில் இருக்கும் குளிர்பிரதேசமான குல்மார்க்கில் அதிக பனிப்பொழிவால் சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளன. பனிப்பொழிவு காரணமாக பந்திபோரா-குரேஸ் மற்றும் ஸ்ரீநகர்-லே சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இன்று காலை ரஸ்தான் உச்சி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 3 அங்குல அளவுக்கு புதிதாக பனியால் சூழப்பட்டு உள்ளது. அதைபோல, கிஷ்த்வார் – மச்சியால் (2 அங்குலம்), இஷ்டயாரி (3 அங்குலம்) மர்வா (3 அங்குலம்) மற்றும் வர்வான் (6 அங்குலம்) உள்ளிட்ட இடங்கள் பனியால் சூழப்பட்டு உள்ளன.

அங்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.பஹல்காம் பகுதியில் நேற்றிரவு மிகக்குறைந்த வெப்பநிலையாக மைனஸ் 4.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.

related posts