Home உலகம் 53 வினாடிகளில் 100 படிக்கட்டுகளில் ஏறி கின்னஸ் சாதனை

53 வினாடிகளில் 100 படிக்கட்டுகளில் ஏறி கின்னஸ் சாதனை

by Jey

வியட்நாம் நாட்டை சேர்ந்த ஜியாங் குவோக் கோ மற்றும் ஜியாங் குவோக் ஜிகய்ப் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவர். இவர்கள் இருவருக்கும் சிறு வயது முதலே சர்க்கஸ் போட்டிகளில் அதீத ஆர்வம் கொண்டவர்களாக விளங்கி வருகின்றனர். பல்வேறு ஸ்டண்ட் சாகசங்களை புரிந்துள்ள இவர்கள் தற்போது அனைவரையும் ஆச்சர்யம் அடைய செய்யும் புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.

அதாவது ஒரு சகோதரர் தலையில் மற்றொரு சகோதரர் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு ஏறினார். பின்னர் கீழே இருந்த சகோதரர் 53 வினாடிகளில் 100 படிக்கட்டுகளில் ஏறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கடந்த 23 ஆம் தேதி ஸ்பெயினின் ஜிரோனாவில் உள்ள செயிண்ட் மேரிஸ் கதீட்ரலுக்கு வெளியே இருந்த படிகளில் இவர்கள் தங்கள் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இது குறித்து ஜியாங் குவோக் கோ கூறியதாவது :

நாங்கள் 15 ஆண்டுகளாக இந்த சாதனையை நிகழ்த்த ஒத்திகை பார்த்து வருகிறோம். எங்கள் கடினமான பயிற்சியின் போது ஏராளமான விபத்துக்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இன்று நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம். இறுதியாக 53 வினாடிகளுக்குள் 100 படிகளை ஏறிவிட்டோம் இதை நாங்கள் நினைத்து பார்க்கவில்லை.

இந்த நாளை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் 90 படிகளை 52 வினாடிகளில் ஏறி இருந்தோம். இப்போது அதை 100 படிகளாக மாற்றியுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

related posts