Home கனடா கோவிட் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு மத்தியில் பிரம்டனில் புத்தாண்டு கொண்டாட்டம்

கோவிட் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு மத்தியில் பிரம்டனில் புத்தாண்டு கொண்டாட்டம்

by Jey

கோவிட் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு மத்தியில் பிரம்டனில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடாத்தப்பட உள்ளன.

அண்டை நகரான மிஸ்ஸிசாகுவாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், பிரம்டனில் திறந்த வெளியில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என நகர மேயர் பெற்றிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகள் நிகழ்வுகளை ரத்து செய்யுமாறு வலுவாக பரிந்துரை செய்தால் மட்டும் அது குறித்து தீர்மானிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திறந்த வெளியில் நடைபெறும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்கக்கூடிய மொத்த எண்ணிக்கை 574 என்பது குறிப்பிடத்தக்கது.

related posts