Home உலகம் விண்வெளி என்பது விபத்துகளின் மையம்

விண்வெளி என்பது விபத்துகளின் மையம்

by Jey

விண்வெளியில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இடையில் மோதல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. விண்வெளி என்பது விபத்துகளின் மையமாகவோ அல்லது போர் மூளும் இடமாகவோ மாறுவது போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது கற்பனையல்ல, நிஜம்.

கடந்த ஓரிரு மாதங்களில் சர்வதேச விண்வெளி நிலையம், சீன விண்வெளி நிலையம், செயற்கைக்கோள் ஆகியவை நேருக்கு நேர் மோதுவது போன்ற சூழல்கள் உருவாகி வருகின்றன. அவசர நடவடிக்கைகளை எடுத்து விண்வெளி நிலையங்களின் இருப்பிடத்தை மாற்றுவதன் மூலம் மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது.

சீன விண்வெளி நிலையம் மீது மோத இருந்த செயற்கைக்கோள் அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா உரிமையாளருமான எலோன் மஸ்க்கிற்கு சொந்தமானது. இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்த புகாரில், மஸ்கின் ஸ்டார்லிங்க் திட்டத்தின் செயற்கைக்கோள், சீன விண்வெளி நிலையத்தை தாக்க இருப்பதாக சீனா கூறியது.

விண்வெளி நிலையமும் செயற்கைக்கோளும் மோதுவது போன்ற சூழல் ஏற்பட்டது இது முதல் முறை அல்ல. ஒருமுறை ஜூலை 1ஆம் தேதியும், இரண்டாவது முறையாக அக்டோபர் 21ஆம் தேதியும் மோதுவது போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. சீனாவின் விண்வெளி நிலையம் மோதலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்று சீனா கூறியது. ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் 1,700 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களின் குழுவாகும். அதன் நோக்கம் பூமியின் பெரும்பாலான பகுதிகளில் இணைய வசதியை எட்ட செய்வது ஆகும்.

விண்வெளி நிலையத்தில் குப்பைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக, நாசா (NASA) தொடர்ந்து கூறி வரும் நிலையில், முன்னதாக இந்த ஆண்டு நவம்பரில், ரஷ்யா தரஷ்யா தனது செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணைகளில் ஒன்றை சோதனை செய்வதற்காக தனது சொந்த செயற்கைக்கோளான ‘Tselina-D’ ஐ விண்வெளியில் சுட்டு வீழ்த்தியது. இதனால் ஆயிரக்கணக்கான புதிய குப்பை பொருட்கள் சேர்ந்துள்ளது. ரஷ்ய செயற்கைக்கோளில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான குப்பைகள் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சுற்றி நகரத் தொடங்கி, ஐஎஸ்எஸ் மீது மோதும் அபாயம் ஏற்பட்டது.

related posts