கியூபெக்கில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் மீளவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாகாணத்தில் நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு இரவு 10.00 மணிக்கு மேல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
இன்றைய தினம் முதல் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாண முதல்வர் ஊரடங்குச் சட்டம் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.