தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள நிங்லாங் மாவட்டத்தில் இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளர்.
இன்று மதியம் சுமார் 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லிஜியாங் நகரில் உள்ள நிங்லாங் மாவட்டத்திலிருந்து 60 கிமீ தொலைவிலும், அருகிலுள்ள யோங்னிங்கிலிருந்து 3 கிமீ தொலைவிலும் அதன் மையம் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆறு டிகிரிக்கும் மேலான நில அதிர்வு தீவிரம் கொண்ட பாதிக்கப்பட்ட பகுதி 1,389 சதுர கிமீ பரப்பளவில் உள்ளது, இந்த பகுதியில் ஏறக்குறைய 24,000 மக்கள் வசிக்கின்றனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ரிக்டராக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிங்லாங்கில் உள்ள தீயணைப்புப் படை நான்கு வாகனங்கள் மற்றும் 15 பேர் கொண்ட குழுவை பேரழிவு குறித்து ஆய்வு செய்வதற்காக நிலநடுக்க மையத்திற்கு அனுப்பியுள்ளது. மேலும், 60 பேர் கொண்ட தேடல் மற்றும் மீட்புக் குழுவும் அனுப்பப்பட்டுள்ளது.