ஐரோப்பிய நாடுகளில் 100 மில்லியன் கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இது உலக அளவிலான மொத்த எண்ணிக்கையின் மூன்றில் ஒரு பகுதியை விடவும் அதிகமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய மாதங்களில் ஐரோப்பாவில் கூடுதல் எண்ணிக்கையில் கோவிட் தொற்று உறுதியளார்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் மிகவும் வேகமாக பரவக்கூடிய ஒமிக்ரோன் திரிபின் தாக்கத்தினால் பெரும் எண்ணிக்கையிலான தொற்று உறுதியளார்கள் பதிவாகி வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டு காலப் பகுதியில் ஐரோப்பா முழுவதிலும் சுமார் 100,074,753 நோய் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 4.9 மில்லியன் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த ஒரு வார காலத்தில் பிரான்ஸில் மட்டும் ஒரு மில்லியன் நோய்த் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
எவ்வாறெனினும் ஐரோப்பாவில் கோவிட்டுடன் தொடர்புடைய மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜனவரியில் ஐரோப்பாவில் நாளாந்த கோவிட் மரண சராசரி எண்ணிக்கை 5735 ஆக காணப்பட்டதுடன் கடந்த வார காலப் பகுதியில் இந்த நாளாந்த சராசரி எண்ணிக்கை 3413 மரணங்கள் என பதிவாகியுள்ளது.