ஒன்றாரியோ வைத்தியசாலைகளில் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணம் முழுவதிலும் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வைத்தியசாலைகளில் மருத்துவ பணியாளர்களும் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நூற்றுக் கணக்கான மருத்துவ பணியாளர்கள் தொற்றுக்கு இலக்காகியிருப்பதனால் சிகிச்சை அளிப்பதில் பெரும் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் திரிபு எதிர்பார்க்காத அளவிற்கு நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.