கோவிட் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்து ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரவு நேரங்களில் ரெஸ்டுரன்ட்களில் அமர்ந்து உணவு அருந்துவதற்கு தடை விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின் போதான கொள்ளளவு 50 வீதமாகவும், அத்தியாவசியமற்ற சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின் போதான கொள்ளளவு 25 வீதமாகவும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜிம்கள் உள்ளிட்ட இடங்களிலும் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.