” இந்த ஆட்சியை விரட்டியடித்து புதிய ஆட்சியை உருவாக்குவதற்கு ஜனநாயக வழியில் மக்கள் வீதிக்கு இறங்கினால் அதற்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நாம் தயார்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் அவசியமானதொரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய முக்கியமான கால கட்டத்தில் நாம் உள்ளோம். எனவே, மக்கள் புரட்சிக்கும், புதிய ஆட்சிக்கும் தலையேற்க தயாராகவே இருக்கின்றோம் எனவும் அநுரகுமார கூறியுள்ளார்.
” நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்சியாளர்களே காரணம். அவர்களின் தவறான கொள்கைகளாலேயே நாடு கடன் பொறிக்குள் சிக்கியுள்ளது. இந்நிலைமைக்கு கடந்த அரசும் பொறுப்புக்கூறவேண்டும். புரட்சிமூலமே இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும். அது ஜனநாயக வழியிலான அரசியல் புரட்சியாக அமைய வேண்டும். இதற்கு அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு வேண்டும்.” – என்றார்.