Home இந்தியா பாதுகாப்புப் பணியாளர்களின் வார்டுகளுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான உதவித்தொகை

பாதுகாப்புப் பணியாளர்களின் வார்டுகளுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான உதவித்தொகை

by Jey

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் அமைந்துள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில், ‘கல்பனா சாவ்லா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை(கே சி சி ஆர் எஸ் எஸ் டி)’ திறந்து வைத்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.

முப்படைகளின் பாதுகாப்புப் பணியாளர்களின் வார்டுகளுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான உதவித்தொகை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அதன்பின், அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது:-

“டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் சதீஷ் தவான் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் ஆகியோரின் கனவுகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் நாம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

வெவ்வேறு கிரகங்கள் மற்றும் விண்மீன்களை நீங்கள் பார்த்தால், ஆர்யபட்டா, விக்ரம் சாராபாய், சதீஷ் தவான் மற்றும் கல்பனா சாவ்லா போன்ற பல இந்தியர்கள் உங்கள் மத்தியில் இருந்து வெளிப்படுவார்கள்.

இன்றைய காலகட்டத்தில் விண்வெளித் துறையின் முக்கியத்துவம் அளப்பரிய முடியாதது. விண்வெளி துறையானது மேப்பிங், இமேஜிங் மற்றும் இணைப்பு வசதிகள், வேகமான போக்குவரத்து, வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த துறை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

இன்று, தனியாரால் விண்வெளி துறையில் அதிக எண்ணிக்கையிலான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அது பாதுகாப்பு துறையாக இருந்தாலும் சரி அல்லது விண்வெளி துறையாக இருந்தாலும், இந்த துறைகளில் நாங்கள் தனியார் துறையை முழுமையாக வரவேற்கிறோம்.”

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

மாணவர்களை விண்வெளி துறையில் பயிற்சி செய்யும் நோக்கில் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மையம் சண்டிகர் பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட நானோ செயற்கைக்கோளான ‘சண்டிகர் பல்கலைக்கழக செயற்கைக்கோளினை (சி யூ சாட்)’ பூமியில் இருந்து செயல்படுத்தும் கட்டுப்பாட்டு மையமாக இருக்கும்.

இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள 75-வது சுதந்திர தினத்தில் மொத்தம் 75 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அவற்றுள் ஒன்றாக இந்த செயற்கைக்கோளும் இருக்கும்.

related posts