Home இந்தியா ஒமைக்ரானால் இந்தியாவில் முதல் மரணம்

ஒமைக்ரானால் இந்தியாவில் முதல் மரணம்

by Jey

ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயதான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் உறுதிபடுத்தி உள்ளனர்.

அந்த நபர் கொரோனாவுக்கு பிந்தைய நிமோனியா மற்றும் சர்க்கரை வியாதி, ஹைப்பர்-டென்ஷன் மற்றும் ஹைப்போ-தைராய்டிசம் உள்ளிட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று அங்குள்ள மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் 15ந்தேதி அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின் அவருக்கு 25ந்தேதி நடந்த பரிசோதனையில் ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் உயிரிழந்தார். அவர் 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டவர் என்றும் முதல்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

related posts