” பணத்தை அச்சிட்டு 5 ஆயிரம் ரூபா வழங்குவதன்மூலம் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. அது பொருளாதார நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும்.” – என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.
” நாட்டில் தற்போது பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. பச்சை மிளகாயின்விலைகூட ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது. இந்நிலையில் 5 ஆயிரம் ரூபாவை வைத்து என்ன செய்வது? காசு இருந்தாலும் சமையல் எரிவாயு வாங்க முடியுமா?
டிசம்பர் 29 ஆம் திகதி இந்த அரசு பணம் அச்சிட்டது. அதனைதான் பகிர்ந்துவருகின்றது. மக்களுக்கு வருமானம் இல்லை, நாட்டில் உற்பத்தி இல்லை. இவற்றுக்கு உரிய தீர்வை தேடாமல் பணத்தை அச்சிட்டு வழங்குவதில் பயனில்லை.” – என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
” அதேவேளை, பணத்தை அச்சிட்டே அதனை நாட்டு மக்களுக்கு அரசு வழங்குகின்றது. அரசியல் தீர்மானம் பொருளாதாரத்துக்கு தீர்வு அல்ல. ” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.