Home கனடா தடுப்பூசி ஏற்றாதோர் மீது மக்கள் கோபங் கொண்டுள்ளனர்

தடுப்பூசி ஏற்றாதோர் மீது மக்கள் கோபங் கொண்டுள்ளனர்

by Jey

கோவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் மீது மக்கள் கோபம் கொண்டுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத மக்கள் மீது தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் அதிருப்தியுடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதனால் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும், இதன் காரணமாக சத்திர சிகிச்சைகள் உள்ளிட்ட ஏனைய சிகிச்சைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னமும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் மீது மக்கள் கோபம் கொண்டுள்ளனர் எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் கோவிட் காரணமாக பீடிக்கப்பட்டதனால் புற்று நோய் உள்ளிட்ட நோயாளர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களின் செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த சமூகமே ஆபத்துக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது எனவும் இதனால் மக்கள் அவர்கள் மீது ஆத்திரமடைந்துள்ளனர் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக கோவிட் தொற்று உறுதியளார் எண்ணிக்கை சடுதியான அதிகரிப்பினை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

related posts