அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள லெபனான் நகரில், கடந்த 3ம் திகதி இரவு, ஒரு காரில் இரண்டு பேர் பயணித்தனர். முயற்சிஅப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலையில் இருந்து விலகிச் சென்று விபத்துக்கு உள்ளானது. சாலையோரம் இருந்த தடுப்பையும் தகர்த்து, சற்று தொலைவில் சென்று மோதியது.பின் தகவலறிந்து போலீசார் வந்தபோது, அங்கு ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த ஒரு நாய், போலீசாரை வழிமறித்தது.
மேலும், போலீசாரை ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்தது. அதை அறிந்து கொண்ட போலீசாரும், அந்த நாயை பின் தொடர்ந்து சென்றனர்.வியப்பில் ஆழ்த்தியதுகார் விபத்துக்கு உள்ளான இடத்திற்கு, போலீசாரை அந்த நாய் சரியாக அழைத்துச் சென்றது. பின், காரில் இருந்த இரண்டு பேரும், காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.அந்த நாயின் செயல், போலீசாரை வியப்பில் ஆழ்த்தியது. அந்த நாய், விபத்துக்குள்ளான காரில் இருந்த ஒருவருக்கு சொந்தமான நாய் என்பதும், அதன் பெயர், ‘டின்ஸ்லே’ என்பது தெரியவந்துள்ளது