Home கனடா மக்களை ஏமாற்றிய நிறுவன அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

மக்களை ஏமாற்றிய நிறுவன அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

by Jey

பெரும் எண்ணிக்கையிலான மக்களிடம் மோசடி செய்த நிறுவனமொன்றின் பணிப்பாளர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவரும் சுமார் இரண்டாயிரம் பேரிடம் நிதி மோசடி செய்துள்ளதாகத் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நிறுவனமொன்றின் நிதி பணிப்பாளர்களாக கடமையாற்றிய  Alan Zer மற்றும் Rony Spektor  ஆகிய இருவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

நீதிமன்றில் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை குறித்த இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதன்படி, இருவருக்கும் சிறைத்தண்டனை அல்லது வீட்டுக்காவல் மற்றும் நிதி ரீதியான அபராதம் விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த இருவரும் நிதிச் சந்தைகளில் பத்து ஆண்டுகளுக்கு செயற்படக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

related posts