Home உலகம் கஜகஸ்தானில் இரண்டு வாரங்களுக்கு அவசர நிலை பிரகடனம்

கஜகஸ்தானில் இரண்டு வாரங்களுக்கு அவசர நிலை பிரகடனம்

by Jey

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் வன்முறைகளில் ஈடுபடும் போராட்டக்காரர்கள் மீது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 12 போலீசாரும் உயிரிழந்துள்ளனர்.

கஜகஸ்தானில் எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நாட்டின் மேற்கு பகுதியில் வெடித்த இந்த போராட்டம், தலைநகர் நுார் சுல்தான் வரை தற்போது பரவி உள்ளது. இதில் வன்முறைகளும் அரங்கேறுவதால் பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கஜகஸ்தானில் ஆளும் கட்சி பதவி விலகியது. எனினும் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் வரை தற்போதுள்ள அமைச்சர்கள் பணியை தொடருவர் என தெரிவிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு அவசர நிலையை பிரகடனம் செய்வதாக கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமர்ட் டோகாயேவ் அறிவித்தார்.

மேயர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்குள் நுழைந்து உள்ளே இருக்கும் பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடி வருகின்றனர். இந்நிலையில் வன்முறைகளில் ஈடுபடும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வன்முறைகளில் 12 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாகவும், 350க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

related posts