முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் இன்று (07) நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் -21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அவரது கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது.