பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும், அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு, நடப்பு கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங் தேதி குறித்த கால அட்டவணை, கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இதில் பங்கேற்று இடமாறுதல் கேட்கும் ஆசிரியர்கள், தங்கள் விண்ணப்பங்களை, 31ம் தேதி முதல் ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவுக்கு இன்று கடைசி நாள்.ஆசிரியர்களின் விண்ணப்ப பதிவுக்கான எமிஸ் ஆன்லைன் தளம் நேற்றில் இருந்து தான் செயல்பட துவங்கியது.
அதனால் விண்ணப்பம் பதிவு செய்ய, ஒரே நேரத்தில் ஏராளமான ஆசிரியர்கள் முயற்சிப்பதால், இணையதள, ‘சர்வர்’ சுமை அதிகரித்து, பதிவு பணிகள் தாமதமாகி உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பல மாவட்டங்களில், ஆசிரியர்கள் தங்களின் விண்ணப்பங்களை, முதன்மை கல்வி அலுவலகங்களில் சமர்ப்பித்துள்ளனர். அந்த படிவங்களை பதிவேற்றம் செய்வதும் தாமதமாகியுள்ளது. ஆனாலும், திட்டமிட்டபடி ஆசிரியர் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.