ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த சிலர், மொடர்னா கோவிட் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பூஸ்டர் தடுப்பூசியாக மொடர்னாவை ஏற்றிக் கொள்ள ஒன்றாரியோ மக்கள் தயக்கம் காட்டி வருவதாக மருந்தகங்கள் தெரிவித்துள்ளன.
பைசர் தடுப்பூசிக்கு பதிலீடாக மொடர்னாவை ஏற்க சிலர் மறுத்து வருவதாகவும், தடுப்பூசி ஏற்ற வந்தும் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பூஸ்டர் தடுப்பூசியாக ஏதேனும் ஓர் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள முடியும் என சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
எனினும், ஒன்றாரியோவைச் சேர்ந்த சிலர் இவ்வாறு மொடர்னா தடுப்பூசி ஏற்றிக்கொள்ள விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.