எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவில் உள்ள எல்- டோர் என்ற நகரத்தில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 14 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்தனர்.
கெய்ரோவில் இருந்து ஷார்ம் எல் ஷேக் நகருக்கு சென்ற பேருந்துகள் அதிகாலை பனிமூட்டம் காரணமாக மோதிக்கொண்டதாக அந்நாட்டு அதிகரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோசமான சாலை கட்டமைப்புகள் மற்றும் டிராபிக் விதிகளை சரியாக பின்பற்றாததன் காரணமாக எகிப்தில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. கடந்த 2020- ஆம் ஆண்டில் மட்டும் அந்நாட்டில் 7 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் பலியாகினர்.