Home கனடா ஒன்றாரியோவில் தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளர் எண்ணிக்கை உயர்வு

ஒன்றாரியோவில் தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளர் எண்ணிக்கை உயர்வு

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் மாகாணத்தில் 21 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர் எண்ணிக்கை 400 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த ஆறு மாத காலப் பகுதியில் பதிவான அதி கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளர் எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் 11959 கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை குறித்த புள்ள விபரங்களை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் சமூகத்தில் பரவியிருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

related posts