நியூயார்க் நகரின் பிராங்க்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட ‘எலக்ட்ரிக் ஸ்பேஸ் ஹீட்டர்’ பழுதினால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 9 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இது 30 ஆண்டுகளில் நியூயார்க்கில் மிக மோசமான தீ விபத்தாகும். ஒன்பது குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். நியூயார்க் தீயணைப்புத் துறை (FDNY) ஆணையர் டேனியல் நிக்ரோ இது குறித்து கூறுகையில், கட்டிடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்கள் தீயில் எரிந்தன என்றார்.
நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ், கவர்னர் கேத்தி ஹோச்சுல் மற்றும் அமெரிக்க செனட்டர் சார்லஸ் ஷுமர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேயர் ஆடம்ஸின் மூத்த ஆலோசகர் ஸ்டீபன் ரிங்கல் இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார். விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் 16 வயது அல்லது அதற்கும் குறைவானவர்கள் என்று அவர் கூறினார். 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கமிஷனர் நீக்ரோ தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சுவாசம் வழியாக உடலில் புகை நுழைந்ததுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு தளத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்
மேயர் ஆடம்ஸ் இந்த சம்பவத்தை “திகிலானது” என்று விவரித்தார்.மேலும் “இது மிகவும் கொடூரமான தீ விபத்துக்களில் ஒன்றாக இருக்கும்.” தீயணைப்பு வீரர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு தளத்திலும், விபத்தின் காரணமாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சுவாசிப்பதில் சிக்கல் உள்ளவர்களைக் கண்டறிந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் 181 தெருவில் உள்ள இடத்திற்கு சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டனர், என்றார்.
கட்டிடம் முழுவதும் பரவிய புகை
19 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீ, பின்னர் இரண்டாவது மாடிக்கும் பரவி படிப்படியாகக் கட்டிடம் முழுவதும் புகை சூழ்ந்து கொண்டது. தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக நீக்ரோ கூறினார். சில நாட்களுக்கு முன்பு, பிலடெல்பியாவில் வீடு தீப்பிடித்ததில் 8 குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். 1989 ஆண்டு, டென்னசி அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.