Home உலகம் நோயாளிகளிடையே மியூடேஷன் தீவிரம் அதிகம்

நோயாளிகளிடையே மியூடேஷன் தீவிரம் அதிகம்

by Jey

கொரோனா வைரஸின் மற்றொரு மாறுபாடு உருவாகியுள்ளது, இதற்கு ‘டெல்டாக்ரான்’ (Deltacron) என்று பெயரிடப்பட்டுள்ளது. சைப்ரஸில் (Cyprus) காணப்படும் இந்த புதிய மாறுபாட்டால் தற்போது வரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டாக்ரானின் மரபணு பின்னணியானது கொரோனாவின் டெல்டா மாறுபாட்டைப் போன்றது, அத்துடம் இது ஒமிக்ரான் போன்ற சில மியூடேஷனையும் கொண்டுள்ளதால், இதற்கு டெல்டாக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் 10 மியூடேஷன் கண்டறிந்தது
‘டெய்லி ஸ்டார்’ அறிக்கையின்படி, சைப்ரஸில் ‘டெல்டாக்ரான்’ நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகளில் ஒமிக்ரானின் 10 மியூடேஷன் இருப்பது கண்டறியப்பட்டது. டெல்டா மற்றும் ஒமிக்ரான் (Omicron) இணைவதன் மூலம் இந்த திரிபு தயாரிக்கப்பட்டது என்று சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பேராசிரியர் லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ் கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடையே மியூடேஷன் தீவிரம் அதிகமாக இருப்பதாக அவர் கூறினார், இது புதிய மாறுபாட்டிற்கும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கும் இடையிலான தொடர்பைக் குறிக்கிறது.

related posts