Home உலகம் தொலை தொடர்பு சாதனம் வாங்கியதில் மோசடி- சூச்சிக்கு நான்கு ஆண்டுகள் சிறை

தொலை தொடர்பு சாதனம் வாங்கியதில் மோசடி- சூச்சிக்கு நான்கு ஆண்டுகள் சிறை

by Jey

மியான்மரில் ஆட்சியில் இருந்து துாக்கி எறியப்பட்ட, மூத்த அரசியல் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு, 76, மற்றொரு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடான மியான்மரில் 2020ல் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி வென்றது. ஆனால் அதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி அரசைக் கவிழ்த்து, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.அதைத் தொடர்ந்து அக்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுதும் போராட்டங்கள் நடந்தன. அதில் ஏற்பட்ட வன்முறையில் 1,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

சூச்சி மீது ராணுவ அரசு பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. இவை அனைத்திலும் தண்டனை விதிக்கப்பட்டால் அமைதிக்காக நோபல் பரிசு வென்ற சூச்சி, அடுத்த 100 ஆண்டுகள் சிறையில் இருக்க நேரிடும்.கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்தும் வகையில் மக்களை துாண்டியதாக ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் சூச்சிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை, ராணுவ அரசின் தலைவர் ஜெனரல் மின் ஆங்க் லெயிங்க் இரண்டு ஆண்டுகளாக குறைத்தார்.

இந்நிலையில் ‘வாக்கி டாக்கி’ தொலை தொடர்பு சாதனம் வாங்கியதில் மோசடி செய்தது, கொரோனா தடுப்பு விதிகளை மீறியது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில் சூச்சிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

related posts