கனடாவின் அனைவருக்கும் நான்காம் டோஸ் தடுப்பூசி ஏற்றுவதற்கு போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இது பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள தகுதியுடைய மொத்த சனத்தொகையினருக்கும், பூஸ்டர் டோஸ் மற்றும் நான்காம் டோஸ் தடுப்பூசி ஏற்றுவதற்கு போதியளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாணங்களுக்கு 140 மில்லியன் கோவிட் பரிசோதனை கருவிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண முதல்வர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 18ம் திகதி வரையில் 12 வயதுக்கும் மேற்பட்ட 87.3 வீதமானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.