எதிர்வரும் 17ம் திகதி ஒன்றாரியோ மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என மாகாண முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.
மாணவர்கள் நேரில் வகுப்புக்கு வந்து கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இவ்வாறு திகதி அறிவித்துள்ளார்.
அதுவரையில் மாணவர்கள் வீடுகளிலிருந்து தொலைகல்வி நுட்பங்களின் அடிப்படையில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் திரிபு காரணமாக நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இந்த இரண்டு வார காலப் பகுதியில் கூடுதல் எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசி ஏற்ற முடியும் எனவும், அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.