ஒமிக்ரோனை கட்டுப்படுத்துவதற்கு முடக்க நிலைமைகள் அறிவிக்கப்படுவதனை மக்கள் ஆதரிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளது.
முடக்க நிலை அறிவிப்பு மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதனை மக்கள் ஆதரிக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒமிக்ரோன் பரவுகையை கட்டுப்படுத்துவதற்கு அதிகளவில் சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென 56 வீதமானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் பாரியளவு அச்சறுத்தலை ஏற்படுத்தாது என 31 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 14 வீதமானவர்கள் தங்களுக்கு இது பற்றிய புரிதல் கிடையாது என தெரிவித்துள்ளனர்.