துாத்துக்குடி துறைமுகம் வழியே வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த ரூ.10 கோடி மதிப்பிலான 20 டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
துாத்துக்குடியை அடுத்துள்ள புதூர் பாண்டியாபுரத்தில் ராகேஷ் 38, என்பவருக்கு சொந்தமான குடோனில் டிச. 24 முதல் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அதில் 20 டன் செம்மரக்கட்டைகள் இருந்தன.
அதன் மதிப்பு ரூ 10 கோடி ஆகும். லாரியின் உரிமையாளர் தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜேஷ் என தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.