இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளை மிரட்டும் வகையில் சீனா நடந்து கொள்வது கவலை அளிப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் துறை செயலர் ஜென் பெசகி நேற்று கூறியதாவது:இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளை மிரட்டும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருவது கவலை அளிக்கிறது. சீனாவின் இத்தகைய போக்கு ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் மட்டுமின்றி உலகளவில் ஸ்திரமற்ற சூழலுக்கு வழிவகுத்து விடும்.
இதுபோன்ற சூழலில் நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும். இந்திய – சீன எல்லை நிலவரத்தை அமெரிக்கா கூர்ந்து கண்காணித்து வருகிறது.இரு தரப்பு பேச்சு வாயிலாக எல்லைப் பிரச்னைகளை தீர்க்க அமெரிக்கா ஆதரவளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.