கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத கியூபெக் பிரஜைகள் சுகாதார வரி செலுத்த வேண்டுமென கியூபெக் மாகாண முதல்வர் பிரான்கோயிஸ் லெகாயுல்ட் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் முதல் டோஸ் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள மறுக்கும் நபர்கள் மீது இந்த சுகாதார வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மருத்துவ காரணிகள் அன்றி தடுப்பூசி ஏற்றிக் கொள்ள மறுக்கும் நபர்களுக்கு இவ்வாறு வரி விதிக்கப்பட உள்ளது.
இடைக்கால பொதுச் சுகாதார பணிப்பாளராக கடமையாற்றி வந்த டொக்டர் ஹராகியோ அருடா திடீரென பதவி விலகியதனைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு இடைக்கால அடிப்படையில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.