எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் ஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறை படமாக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இதில் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் (vijay sethupathi) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவரும் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஒப்புதல் தெரிவித்தார்.
அதன்படி படத்திற்கான பணிகள் மும்ம்முரமாக ஆரம்பிக்கப்பட்டு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
அந்த லுக்கில் முத்தையா முரளிதரனை சிறந்த முறையில் பிரதிபலிக்கும் விதமாக விஜய் சேதுபதியின் புகைப்படம் இருந்தது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
அதே சமயம் தமிழருக்கு விரோதம் செய்த குற்றத்தில் இலங்கை பிரதமர் ராஜபக்சேவை முத்தையா ஆதரித்ததன் காரணமாக இப்படத்திற்கு எதிராக அரசியல் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்தது. இந்த எதிர்ப்புகள் நடிகர் விஜய் சேதுபதிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது.
அதனை தொடர்ந்து தான் மீண்டும் இந்த படத்தில் தொடர விரும்பவில்லை என கூறி நடிகர் விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகினார். இருப்பினும் இப்படத்தை கைவிட மனமில்லாமல் கதைக்கு ஏற்ற நடிகர்களை படக்குழு தொடர்ந்து தேடி வந்தது.
இந்நிலையில் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ பட புகழ் தேவ் படேலை, முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு அணுகியதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் சேதுபதிக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தை தேவ் படேல் ஏற்று நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும் தேவ் படேல் ஹோட்டல் மும்பை(Hotel Mumbai), தி வெட்டிங் கெஸ்ட்(The Wedding Guest), தி கிரீன் நைட்(The Green Night) போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.